முள்ளியவளை திலகம் மில் வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

IMG 292589e12dfe158c73f961e2a0da2ae7 V
IMG 292589e12dfe158c73f961e2a0da2ae7 V

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையின் கீழ் இலங்கை அரசாங்கமானது  தெரிவு செய்யப்பட்ட தேசிய, மாகாண மற்றும் உள்ளூர் வீதிகளின் போக்குவரத்து வினைத்திறனை மேம்படுத்துவதன் மூலம் கிராமிய சமூகங்கள் மற்றும் சமூகபொருளாதார மையங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துகின்றது.

IMG eb1c31d11b768db33860bd2669df0e16 V 1

குறித்த (Integrated Road Investment Program) ஐரோட் திட்டத்தின் கீழ், கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் ஊவா மாகாணத்தில் சுமார் 3750 கி.மீ கிராமப்புற வீதிகள்  மேம்படுத்தப்படும் செயற்றிட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன

IMG c2be7a98d5cc9844a01d2d722d3c47e7 V

அந்தவகையில் குறித்த திட்டத்தின் கீழ்  முல்லைத்தீவு மாவட்டத்திலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால்  பல்வேறு வீதி புணரமைப்பு பணிகள் இடம்பெறுகிறது அந்தவகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புணரமைப்பு செய்யப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான  வீதியான தண்ணிரூற்று முள்ளியவளை திலகம் மில் வீதி காபற் வீதியாக புணரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

குறித்த நிகழ்வில்  கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு  குறித்த வீதியினை மக்கள் பாவனைக்காக கையளித்தனர்