திலும் அமுனுகம ரிதிதென்ன டிப்போவுக்கு விஜயம்

03 3
03 3

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு போக்குவரத்து சாலைகளுக்கும் விஜயம் மேற்கொண்டு நிலவும் தேவைகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டார்

இதன் போது மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ரிதிதென்ன போக்குவரத்து சாலையை நேற்று (சனிக்கிழமை) இரவு வாகரை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எம்.தாஹிரின் அழைப்பின் பேரில் வருகை தந்து பார்வையிட்டார்.

05

ரிதிதென்ன பேருந்து சாலை தற்காலிகமாக மூடப்பட்டு வாழைச்சேனை சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளதனால் ரிதிதென்ன சாலை மீண்டும் திறக்கப்பட்டு இயங்குவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் தொடர்பாக இராஜாங்க அமைச்சரிடம் பிரமுகர்களால் தெளிவுபடுத்தப்பட்டதுடன் ரிதிதென்ன சாலை எல்லைக்கிராம மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் உறுதுணையாக செயற்பட்ட சாலை என்ற விடயமும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

07

சகல விடயங்களையும் கேட்டறிந்து கொண்ட போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தற்காலிகமாக மூடப்பட்ட ரிதிதன்ன இலங்கை போக்குவரத்து சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தேவை காணப்படுவதாகவும் நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளதால் உடனடியாக அபிவிருத்தி செய்து  திறக்கமுடியாது என்றும் எதிர்காலத்தில் இதனை மீளவும் திறந்து இங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.ஜி.அஸீஸ_ல் றஹீம், மௌலவி எம்.ஐ.ஹாமித் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல். அஸ்மி ரிதிதென்ன சாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.