ஹபரணையில் சஃபாரி வாகனம் விபத்து – ஒருவர் பலி : 8 பேர் காயம்

202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF 1
202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF 1

ஹபரண ஹுருலு சூழலியல் பூங்காவில் சஃபாரி வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் 8 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்தவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.