நாட்டில் அபிவிருத்தி செய்வதற்கான 68,000 வீதிகள் அடையாளம்

Road Block 1
Road Block 1

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய நாட்டில் அபிவிருத்தி செய்வதற்கான 68,000 வீதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், குறித்த 68,000 வீதிகளில் 14,000 வீதிகளின் அபிவிருத்தி செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்வரும் 03 மாதங்களுக்குள் மேலும் 2,500 வீதிகள் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.