முல்லைத்தீவில் 56.9 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது:26 குளங்கள் வான் பாய்கிறது -அரசாங்க அதிபர்

received 1075054843258215
received 1075054843258215

முல்லைத்தீவில் 56.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் 26 குளங்கள் வான் பாய்கிறது எனவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்தார்

வடக்கு கிழக்கு பருவபெயர்ச்சி மழை தொடர்பிலான முன்னாயத்த கூட்டம் ஒன்று 09.11.21 முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்தகலந்துரையாடலில் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.இவ்வாறு தெரிவித்தார்

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் காலநிலை வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன் இயற்கை அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் என்ன விதமான தேவைகள் ஏற்படும் என்பது பற்றியும் அதனை எவ்விதமாக நிவர்த்தி செய்வது என்பது தொடர்பிலும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பினை வழங்குவதற்கு ஏற்றவகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

வழிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை பெய்துகொண்டிருக்கின்றது கடந்த இரவு 56.9 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளன.எந்த விதமான அனர்த்தங்களும் இதுவரை பதிவாகவில்லை பொதுவாக மாகாண நீர்பாசனத்தின் கீழ் இரண்டு குழங்கள் வான்பாய்கின்றன.பழையமுறுகண்டி,மருதமடு இரண்டும் வான்பாய்கின்றன மாவட்டத்தில் உள்ள ஏனை குளங்கள் நீர் தேக்கி வருகின்றன.

206 சிறு குளங்கள் கமநலசேவை திணைக்களத்திற்கு உட்பட்ட குளங்கள் இதில் 24 சிறிய குளங்கள் வான்பாய்கின்றன இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

இன்றைய கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி 5 குழுக்களாக பிரித்து அதற்குள் திணைக்களங்கள் உள்வாங்கப்பட்டுள்ளது அவர்களுக்கான அதிகாரத்தினை வழங்கியுள்ளோம் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற அனர்த்தின் போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்