கோதுமை மாவை அதிக விலைக்கு விற்ற 200 விற்பனையாளர்கள் கைது!

Wheat Flour
Wheat Flour

ப்ரிமா நிறுவனம் தயாரிக்கும் 1 கிலோ கோதுமை மாவின் விலையை ஒரு கிலோவிற்கு 5.50 ரூபாவினால் உயர்த்தியிருந்தது. அதன்படி, ப்ரிமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் திருத்தப்பட்ட விலை 95.50 ரூபா ஆக உள்ளது.

இவ் அறிவித்தலுக்கு நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) கோதுமை மாவின் விலையை அதன் அனுமதியின்றி உயர்த்துவதற்கான ப்ரிமாவின் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இருப்பினும், கோதுமை மாவின் அதிகரித்த விலைகள் குறைக்கப்படாது என்று ப்ரிமா சிலோன் (பிரைவேட்) லிமிடெட் தனது விநியோகஸ்தர்களுக்கு தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கைக்குப் பின்னர், மற்ற பாண் தயாரிப்புக்களை 02 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் நுகர்வோர் விவகார ஆணையம் கடந்த சில நாட்களில் நடாத்திய சோதனைகளில், 200 விற்பனையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு கோதுமை மாவினை விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.