முல்லைத்தீவில் மூன்று பாடசாலைகளில் அமைக்கப்பட்ட குடிநீர் வசதி மாணவர்களிடம் கையளிப்பு!

received 580241483049953
received 580241483049953

முல்லைத்தீவு மாவட்டத்தின்  துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட மூன்று பாடசாலைகளுக்கு நஷனல் பி வி சி நிறுவனத்தின் உதவியுடன் இராணுவத்தினரால் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின்  துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட கூழாமுறிப்பு அரசினர் தமிழக் கலவன் பாடசாலை , கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழக் கலவன் பாடசாலை, மாமடு பழம்பாசி அரசினர் தமிழக் கலவன் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளுக்கே இவ்வாறு குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.  

நஷனல் பி வி சி நிறுவனத்தின் உதவியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குறித்த குடிநீர் திட்டங்கள் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று (10) இடம்பெற்றது.

இன்று காலை 8.30 மணியளவில் கூழாமுறிப்பு அரசினர் தமிழக் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம்  மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு பாடசாலை முதல்வர் கனகசபாபதி சபாயிதன் தலைமையில் இடம்பெற்றது.

அதனை தெடர்ந்து காலை 9.30 மணியளவில் கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழக் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு பாடசாலை முதல்வர் நற்குணம் சர்வேஸ்வரநாதன்  தலைமையில் இடம்பெற்றது.

அதனை தெடர்ந்து காலை 10.30 மணியளவில் மாமடு பழம்பாசி அரசினர் தமிழக் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு பாடசாலை முதல்வர் பவளகாந்தன் காந்தசீலன்  தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுகளில் 64 வது படைப்பிரிவின் இராணுவ கட்டளை  தளபதி மேஜர் ஜெனரல் யூ.பி.ஆர் வீரகோன் 642 வது படைப்பிரிவின் இராணுவ கட்டளை  தளபதி கேணல் ஜி.டி.எஸ் மேதங்க அல்விஸ் நஷனல் பி வி சி நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு முகாமையாளர் சப்புமல் கேரத் ,நஷனல் பி வி சி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு குறித்த குடிநீர் திட்டங்களை மாணவர்களின் பாவனைக்கு கையளித்தனர்.

நிகழ்வுகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.