தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

corona 11 1 720x375 1
corona 11 1 720x375 1

நாட்டில் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,000 ஐ அண்மித்துள்ளது.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் பைஸர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89,097 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், நாட்டில் நேற்றைய நாளில், 30,020 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, 1,767 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 1,461 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

9,639 பேருக்கு பைஸர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், 10,403 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 676 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

56 பேருக்கு மொடர்னா முதலாம் தடுப்பூசியும், 18 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.