ஆசிரியர் – அதிபர்கள் வேதன முரண்பாடுகளை தீர்க்க 300,000 மில்லியன் ஒதுக்கீடு!

A.teachers.protest
A.teachers.protest

சுதந்திர இலங்கையின் 76ஆவது பாதீடு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது, நாட்டின் சகல பாடசாலைகளுக்கும், அதிவேக இணைய வசதிகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச பாடசாலை மற்றும் வைத்தியசாலையை நிர்மாணிக்க இடம் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டது.

அத்துடன், பாடசாலை மகிழுந்து உரிமையாளர்களுக்கு சலுகை அளிக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் சகல பாடசாலைகளுக்கும், அதிவேக இணைய வசதிகளை  வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மகிழுந்து உரிமையாளர்களுக்கு சலுகை அளிக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் – அதிபர்கள் வேதனம் தொடர்பான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு 300,000 மில்லியன் ரூபா ஒதுக்க யோசனை முன்வைக்கப்பட்டது.

பட்டதாரிகள் அனைவருக்கும் 2022 ஜனவரி முதல் நிரந்தர நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய பிரச்சினையை தீர்ப்பதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.