பண்டங்கள், சேவைகளுக்கு வரி அறவிடும் விதம் தொடர்பில் விரைவில் அறிவிப்பு

pasil
pasil

பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு வரி அமுலாகும் விதம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த வரியை எந்த சதவீதத்தில் அறவிடுவது மற்றும் எத்தகைய பொருட்களுக்கு வரியை குறைப்பது குறித்து அறியத்தரவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரி கொள்கையை பாரிய மாற்றம் செய்யாமல் நிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

குறைந்தது 3 வருடத்திற்கேனும் ஒரே வரி கொள்கையின் கீழ் வைத்திருக்க வேண்டும்.

அடிக்கடி வரி அறவீட்டில் மாற்றம் ஏற்படுத்துவதனால், சகலரும் பாதிக்கப்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.