வீதி விபத்துக்களை குறைக்க சாரதிகளுக்கு விசேட பயிற்சிகள்

7
7

நாளாந்தம் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக வீதி சட்டங்கள் தொடர்பில் சாரதிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 10ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வீதி விபத்துகள் காரணமான 1,948 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர இதன்போது தெரிவித்துள்ளார்.

விரைவாக அபராதத்தைச் செலுத்துதல் மற்றும் சாரதிகளின் திறன் தொடர்பான மதிப்பெண் முறைமை உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த நடவடிக்கைகளுக்கு அமைய மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் சாரதிகளுக்கு இரண்டு வாரங்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தற்போது சுமார் 17 ஆயிரம் பேர் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகளில் சாரதிகளாகப் பணியாற்றுகின்றனர்.