கனியவளங்கள் அகழ்விற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Sequence 01.00 03 36 07.Still002
Sequence 01.00 03 36 07.Still002

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் இருந்து கனிய வளங்களை அகழ்வது  தொடர்பான அனுமதிகளை வழங்குவது தொடர்பான கூட்டமொன்று  துணுக்காய் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று (13)மாலை  இடம்பெற்றது

Sequence 01.00 04 22 01.Still003

துணுக்காய் பிரதேச செயலாளர் திருமதி ஆ லதுமீரா தலைமையில்   நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான காதர்மஸ்தான் அவர்களுடைய பங்குபற்றுதலுடன் குறித்த கூட்டம் இடம்பெற்றது

இந்த கூட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள்  , கனியவள திணைக்கள அதிகாரிகள் ,வன வளத்திணைக்கள  அதிகாரிகள் ,  பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள், சுற்றுசூழல் அதிகார சபையினர் உள்ளிடட பலர் கலந்து கொண்டனர்

Sequence 01.00 04 44 10.Still004

கலந்து கொண்ட கிராம சேவையாளர்கள் முறையற்ற விதத்தில்  மணல் வியாபாரிகளின் நடவடிக்கைகளால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும்  அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இங்கு கருத்து வெளியிட்டனர்.மணலின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் கனிய வழங்களை உரிய கட்டுப்கபாடுகளுடன் அகழ்ந்து செல்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது

அனுமதி கோரி உள்ளவர்களுடைய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டது சுற்றாடலை பாதிக்கும் வகையில் மணல் அகழ்வு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவது இல்லை என தீர்மானிக்கப்பட்டது.

Sequence 01.00 01 03 11.Still001

இவ்வாறான நிலையில் கிராம சுற்றுசூழல் பாதுகாப்பு குழுவால் நிராகரிக்கப்பட்ட மருதங்குளம் பகுதியில் மணல் அகழ்வுக்கான அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு ஏனைய உரிய முறையில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களுக்கு  அனுமதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்ட்து