உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்!

Screenshot 20211113 203431 MX Player
Screenshot 20211113 203431 MX Player

புத்தளம் மாரவில கடற்கரையில் டொல்பின் ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் ஆனைவிழுந்தான் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று குறித்த டொல்பினை உடற்கூற்று பரிசோதனைக்காக ஆனைவிழுந்தான் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

உயிரிழந்த டொல்பின் சுமார் 10 அடி நீளமுடையதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பாக கொழும்பு துறைமுக கடற்பரப்பிற்கு வெளியே எம்.வி. எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்ததையடுத்து கடலாமைகள், டொல்பின்கள், திமிங்களங்களென பல உயிரினங்கள் தொடர்ந்தும் உயிரிழந்து வருவதுடன் புத்தளம் மாவட்டத்திலேயே அதிகளவிலான உயிரினங்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.