சிங்கள குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – முன்னாள் எம்.பி.சாந்தி

103214788 e43b722d 3e75 4a61 9255 3bb59debbf20 scaled 2 150x150 1
103214788 e43b722d 3e75 4a61 9255 3bb59debbf20 scaled 2 150x150 1

வவுனியா சிங்கள அரசானது சட்டத்திற்கு முரணாக சுற்று நிரூபத்திற்கு முரணாக சிங்கள கிராமங்களை தமிழர்களது தாயகத்துடன் இணைப்பது தமிழர் கிராமங்களை சிங்கள கிராமங்களுடன் இணைப்பது போன்ற பல்வேறான முரண்பாடான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். சிங்கள குடியேற்றங்களிற்கெதிராக வவுனியா வடக்கில் இன்று (15) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அறிக்கைகள் எவையும் கருத்திற்கு எடுக்கப்படாது தான் நினைத்த போக்கிலே நினைத்தவாக்கிலே வேலைகள் துரித கதியில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அந்தவகையிலே இனப்பரம்பலை மாற்றி அமைக்கின்ற வகையில் இந்தக்குடியேற்றத்திட்டங்கள் நில அபகரிப்புக்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். இது தமிழர்களது தார்மீகமான ஒரு வேண்டுகோளாக இருக்கின்றது. 

தமிழர்களது போராட்டங்களையோ, உணர்வுகளையோ இந்த அரசு மதிக்கவில்லை. இந்தக் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை மலர்கள் மலர்கின்ற இந்த வேளையிலே யாழப்பாணத்தில் ஜே.வி.பி தங்களது போராளிகள் இறந்தவர்களை நினைவுகூர முடியும் என்றால் ஏன் தமிழர்கள் தங்களது தேசத்திலே தங்களது போராளிகளை உறவுகளை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்பதை இந்த அரசு எடுத்து கூறவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.