வவுனியாவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வு

blood
blood

வவுனியாவில் முன்னணி விளையாட்டு கழகமான ஜங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் வருடந்தோறும் ஏற்பாடு செய்யும் இரத்ததான முகாம் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

வவுனியா வைரவபுளியங்குளம் வைரவர்கோவில் வீதியில் அமைந்துள்ள விளையாட்டு கழக கட்டிடத்தில் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ள இரத்ததான நிகழ்வில் கழக உறுப்பினர்களுடன் ஏனைய விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களையும் கலந்துகொண்டு இரத்ததானம் வாழங்குமாறு கழகத்தின் தலைவர் மு. ஜீவன் அழைப்பு விடுத்துள்ளார்.