இனவெறி பொறுத்துக்கொள்ளப்படாது- ருஹுனு பல்கலைக்கழக துணைவேந்தர்

vc of ruhunu
vc of ruhunu

கடந்த சனிக்கிழமை ருஹுனு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 13 வது இலங்கை பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் (SLUG) நிறைவு விழாவில் உலக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரர் கலந்த கொண்டிருந்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய ருஹுனு பல்கலைக்கழக துணைவேந்தர் மூத்த பேராசிரியர் சுஜீவா அமரசேனா அவர்கள்

பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அல்லது கல்வி நடவடிக்கைகளில் இனவெறியை அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். 9,000 க்கும் மேற்பட்ட உள் மற்றும் 20,000 வெளி மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகம் இதுவரை எந்த இனவெறியையும் சந்திக்கவில்லை என்று அவர் கூறினார். தூண்டுதல்கள் நடந்தால் கடுமையாகக் கையாளப்படும் என்று அவர் எச்சரித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கும் மொரட்டுவா பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கால்பந்தாட்ட இறுதிப்போட்டியின் போது போட்டி அதிகாரிகள் வெற்றியை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வழங்கியிருந்தனர். இந்நிலையில் இலங்கை பல்கலைக்கழக விளையாட்டுச் சங்க அதிகாரிகள் (SLUSA) இந்த முடிவை மாற்றியமைத்திருந்தனர்.

இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கம் வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் ருஹுனு பல்கலைக்கழக துணைவேந்தர் ருஹுனு பல்கலைக்கழகத்தை குற்றம் சாட்டுவது வருத்தமளிப்பதாகவும் “ருஹுனா பல்கலைக்கழகத்தின் மீது பழி சுமத்துவது நியாயமற்றது, ஏனென்றால் போட்டி அதிகாரிகளின் முடிவை மாற்றியமைப்பதில் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லை, இது சரியானது என்று நான் நம்புகிறேன். சர்ச்சை தீர்க்கப்படும் வரை கால்பந்து கேடயம் இன்று வழங்கப்படக்கூடாது என்று நான் அறிவுறுத்தியுள்ளேன்” என குறிப்பிட்டிருந்தார்.