ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் : மக்கள் ஆணைக்குழு உதயம்!

image 5578e40905
image 5578e40905

நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் சமூகத்தில் எந்த வித ஏற்றத் தாழ்வுகளும் இன்றி சமமாக நடத்தப்பட வேண்டும்.

அதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான தேவையை உணர்ந்து ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டத்துக்கான மக்கள் ஆணைக்குழு எனும் சமூக அமைப்பொன்று இன்றைய தினம் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவில் எவரும் இணைய முடிவதுடன், அதற்கான விண்ணப்பத்தை தங்களது முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் ஒரே நாடு, ஒரே இனம், ஒரே சட்டத்துக்கான மக்கள் ஆணைக்குழு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

ஒரே நாடு, ஒரே இனம், ஒரே சட்டத்துக்கான மக்கள் ஆணைக்குழு ஸ்தாபிப்பது குறித்து ஊடகங்ளுக்கு தெரியப்படுத்தும் முதலாவது கூட்டம் இன்றைய தினம் கொழும்பு – 10 இல் அமைந்துள்ள சீ.எஸ்.ஆர். நடு நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆணைக்குழு உறுப்பினரான ரஞ்சித் விதானகே, 

“இந்நாட்டில் வாழும் மக்கள் நாளாந்தம் ஏதாவது ஒரு தேவைக்காக அரச காரியாலங்களில் தங்களது வேலைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு பெரும்பாடுபடுகின்றனர்.

இவ்வாறு அரச நிறுவனங்களிலும், சமூகத்திலும், பொது வெளியிலும் பல்வேறு ஏற்றத் தாழ்வு காரணமாக தங்களது தேவைளையும், சமூகத்தில் வாழக்கூடிய  சந்தர்ப்பத்தையும் பொது மக்கள் இழந்து தவித்து வருகின்றனர். 

இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு முதற் கட்டமாகவே  இந்த மக்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சமூக, கலாச்சார, இன, மத , மொழி ரீதியான  ரீதியாக  நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உரிய அதிகாரிகளிடம் ஆவணப்படுத்தி அதற்கான தீர்வுகளை பாதிக்கப்பட்டோருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டத்துக்கான மக்கள் ஆணைக்குழுவின் பிரதான நோக்கமாகும்.

மேலும், இந்நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழும் நாட்டை உருவாக்க சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.