மல்லாவி காவல்துறையினரால் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடையுத்தரவு!

received 597462938164570
received 597462938164570

மல்லாவி காவல்துறையினரால் மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள ஏழு பேருக்கு நீதிமன்றால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய வருடந்தோறும் கார்த்திகை 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் ஏழு பேருக்கு கார்த்திகை 20 ஆம் திகதி முதல் 27 ம் திகதி வரை தமது காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான  தடையுத்தரவை மல்லாவி காவல்துறையினர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் மல்லாவி காவல்துறையினரினால் இன்று மாங்குளம் நீதிமன்றில் ஏஆர்/870/21 வழக்கினூடாக மல்லாவி  காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் மல்லாவி காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் ஏழு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த  தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் அருட் தந்தை நேசன் குலாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா,துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சற்குணநாதன் சுஜன்சன், சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துஜன், தங்கராசா நிறஞ்சன் பத்மநாதன் ஸ்ரீகரன், மகாதேவன் ஆனந்த், உள்ளிட்ட ஏழு பேர் மற்றும் இவர்களது  குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.