தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 42 பேர் கைது

isolation isolated curfew 1 scaled 1
isolation isolated curfew 1 scaled 1

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று பரவலை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் விதி முறைகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவருகிறது.

இதற்கமைவாக காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் கீழ், இதுவரையில் 82,408 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

16 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 17 ஆம் திகதி காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் இந்த சட்டத்தை மீறிய 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.