வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு யாழில் மரங்கள் நாட்டி வைப்பு

20211120 090803
20211120 090803

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மலர் செடிகள் மரக்கன்றுகள் காட்சிப்படுத்தலும் விற்பனையும் இன்று(20)முதல் எதிர்வரும் 26ம் திகதி வரை ஒவ்வொருநாளும் காலை 8.30 மணி முதல் இரவு 7மணி வரை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறவுள்ளது.

மலர் முற்றத்தை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் திறந்து வைத்தார்.

இதன் ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன், யாழ் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்திபன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த காலப்பகுதியில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.