மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று ஆரம்பமானது

IMG 20211120 085024
IMG 20211120 085024

‘மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று ஆரம்பமானது.

குறித்த வேலைத்திட்டம் இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் முன்பாக ஆரம்பமானது.

IMG 20211120 084544

கிளி பீப்பிள் எனும் புலம்பெயர் அமைப்பின் நிதி பங்களிப்புடன் கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்தின் ஒழுங்கமைப்பினால் முன்னெடுக்கப்படுகின்றது.

IMG 20211120 081512

கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்தின் ஒழுங்கமைப்பில் கிளி பீப்பிளின் செயற்திட்டமான “வவுனியா தொடக்கம் வட்டுக்கோட்டை வரை” (V2V) வீதி விபத்துக்களை குறைக்கும் விழிப்புணர்வு பதாதைகளை பாடசாலை முன்பாக மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் நிறுவும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 8.00 மணிக்கு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. 

IMG 20211120 081936

ஆரம்ப நிகழ்வில் வைத்தியர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அண்மையில் விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் விழிப்புணர்வு பதாதைகள் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.