வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Rainning
Rainning

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் கீழ் வளிமண்டல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்தநிலைமை, எதிர்வரும் 24 மணி நேரத்தில் தாழமுக்கமாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய இடங்களின் பல பிரதேசங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.