ஊடகவியலாளர்களுக்கு ஒளிப்படகருவி(கமரா) வழங்கி வைப்பு!

kachcheri 1
kachcheri 1

பாகுபாடற்ற இயங்குநிலை ஊடகசெயற்பாடுகளை ஊக்குவித்தல் செயற்றிட்டத்தினுடாக ஊடகவியலாளர்களுக்கு ஒளிப்படகருவி(கமரா) வழங்கி வைப்பு!

யுஎஸ்ஏஐடி நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன், கிராமிய அபிவிருத்தி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் சமூக ஒற்றுமை மற்றும் நல்லினக்கச் செயற்பாடு  திட்டத்தின் கீழ் பாகுபாடற்ற இயங்குநிலை ஊடக செயற்பாடுகளை ஊக்குவித்தல் செயற்றிட்டத்தினுடாக முல்லைத்தீவு ஊடக அமைய ஊடகவியலாளர்களுக்கான ஒளிப்பட கருவி வழங்கும் நிகழ்வு நேற்று(22) காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த ஒளிப்பட கருவிகளை வழங்கி வைத்தார்.

அமெரிக்க வாழ் மக்களின் வரிப்பணத்தில் செயற்படுத்தப்படும் இத் திட்டத்தினூடாக பத்து ஊடகவியலாளர்களுக்கு ஒளிப்பட கருவியும், முல்லைத்தீவு ஊடக அமையத்திற்கு ஒரு கணனித்தொகுதியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர்களக்கான தொழில்வான்மை விருத்தி சார்ந்த இருகட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டபின் குறித்த உபகரணம் வழங்கப்பட்டுள்ளது. இதன்பின்பும் இருகட்ட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் யுஎஸ்ஏஐடி  நிறுவன திட்ட பணிப்பாளர், கிராமிய அபிவிருத்தி நிறுவன இணைப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், யுஎஸ்ஏஐடி  நிறுவன உத்தியோகத்தர்கள, அரசசார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.