பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு!

Screenshot 20211123 124955 01
Screenshot 20211123 124955 01

பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு இன்று பிரதேச சபையில் இடம்பெற்றது. இதற்கு ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் குறித்த வரவு செலவு திட்டத்திற்கு கிடைத்திருந்த நிலையில் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டத்துடனான பிரதேச சபை அமர்வு பூநகரி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் ஐயம்பிள்ளை தலைமையில் 10 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது வரவு செலவு திட்டம் சபை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
இதன்போது குறித்த வரவு செலவு திட்டத்திற்கு 11 பேர் கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர்களில் 10 பேரும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர்.

 தவிசாளர் மற்றும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இருவரும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் நால்வரும், ஈபிடிபி கட்சி உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர். இதனால் குறித்த வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்று 11 ஆசனங்களுடன் ஆட்சி அமைத்தனர். தவிசாளரை பதவி விலகுமாறு பல தடவைகள் ஆளும் தரப்பினரால் கோரிக்கை விடப்பட்ட நிலையில் இன்றைய தினம் குறித்த வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினராலேயே தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.