இரண்டு நாட்களுக்கு கொவிட் பரிசோதனைகள் இடைநிறுத்தம்

jnudafm8 coronavirus india pti 650 650x400 29 july 21 1628399212
jnudafm8 coronavirus india pti 650 650x400 29 july 21 1628399212

சுகாதாரத்துறை தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்கள் இன்று (24) காலை முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைய, முதல் கொவிட் தொற்றாளர்களுக்கு பீசிஆர் மற்றும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதனம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கமைய, நாடுமுழுவதும், 1, 103 வைத்தியசாலைகள் மற்றும் 365 சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை என்பனவற்றில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழில் வல்லுனர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய பணிப்புறக்கணிப்பில் தமது சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.