யாழில் சீரற்ற காலநிலையால் 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிப்பு!

28SRILANKA1 superJumbo 3
28SRILANKA1 superJumbo 3

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று மாலை நான்கு மணிவரையான நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் நேற்று முதல் பெய்தமழை மற்றும் அதிக காற்று காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் காரைநகரில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனரென தெரிவித்தார்.

இதேவேளை காரைநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவினர் நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டு சேத விபரங்கள் தொடர்பில் களஆய்வில் ஈடுபட்டனர்.