வவுனியாவில் 1476.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

News 1 2
News 1 2

வவுனியாவில் இவ் வருடம் ஜனவரி முதல் இன்று ( 26.11 ) காலை 8.30 மணிவரையுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் 1476.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.


இம்மாதம் 24 ஆம் திகதியிலிருந்து இன்று 26 ஆம் திகதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் மட்டும் 194.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது . தற்போது தாழமுக்கம் உருவாகியதனாலே இவ் மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.

வடகீழ் பருவ பெயர்ச்சி மழை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
அத்துடன் இடி மின்னல் தாக்க  நிலைமைகளும் காணப்படுகின்றன. பொதுமக்கள் பாதுகாப்புடன் நடந்து கொள்ளுமாறு மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் மேலும் தெரிவித்துள்ளார்