முல்லைத்தீவில் வியாழேந்திரனால் 1371 விதை தானியம் வழங்கி வைப்பு!

viyalenthiran 1
viyalenthiran 1

நாட்டைக்கட்டி எழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைத்திட்டமிடலுக்கு அமைய பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் வழிகாட்டலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உழுந்து, பயறு செய்கைக்கான விதை தானியங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(25) துணுக்காய் பிரதேச செயலக மண்டபத்தில் காலை 10.00மணிக்கு நடைபெற்றுள்ளது.

துணுக்காய் பிரதேச செயலாளர் ஆ.லதுமீரா அவர்களின்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜங்க அமைச்சர்   சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உழுந்து பயறு செய்கையை முன்னுரிமைப்படுத்தி ஊக்குவிக்கும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் 1371 பயனாளிகளுக்கு உழுந்து மற்றும் பயறு விதை பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. உழுந்து 522 விவசாயிகளுக்கும், பயறு 849 விவசாயிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இதன் போது அவர் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் : முல்லைத்தீவு மாவட்டம் பாரிய நிலப்பரப்பை கொண்ட மாவட்டமாக காணப்படுவதும் பெரிய, சிறிய நீர்ப்பாசன குளங்கள் அதிகமாக காணப்படுவதால் ஏனைய மாவட்டத்தைவிட அதிக விவசாயம் செய்யும் மாவட்டமாக காணப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அராசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் இங்கு கருத்துத் தெரிவித்த இந்த இரண்டு பயிரினங்களும் மாவட்டத்தில் 727.85 ஏக்கரில் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விதை தானிய கொள்வனவிற்காக இரண்டு கட்டங்களாக நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. 7.5 மில்லியன் ரூபாய் நிதியில் இந்த விவசாயிகளுக்கான விதைகள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

உழுந்து விதைக்காக 3.5 மில்லியனும், பயறு விதைகொள்வனவிற்காக 4 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடுசெய்யப்பட்டு இந்த விதை தானியங்கள் விவசாயிகள் கையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ச டீசில்வா, மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மாவட்ட விவசாய பணிப்பாளர் கோகுலதாசன்,  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.