கண்டியில் மூவர் பயணித்த மகிழுந்து நீரில் மூழ்கி விபத்து

202005081531316104 Tamil News accident textiles employees 3 person died in krishnagiri SECVPF 1
202005081531316104 Tamil News accident textiles employees 3 person died in krishnagiri SECVPF 1

கண்டி – இலுக்மோதர பகுதியில் மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி மகாவலி கங்கையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மகிழுந்தின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், மகிழுந்தில் பயணித்த மூன்று பேரில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், நீரில் மூழ்கிய மகிழுந்தையும் காணாமல் போன மற்றைய நபரையும் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.