நாவலரின் 200வது நூற்றாண்டினை முன்னிட்டு அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழில் ஆரம்பம்!

IMG 20211128 WA0027
IMG 20211128 WA0027

இன்றைய தினம் நல்லூர் நாவலர் ஞாபகார்த்த மண்டபத்தில் குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பிரதமரின் இந்து மத விவகார அலுவலருக்கான இணைப்பாளர் பாபு சர்மா மேற்கண்டவாறு தெரிவித்தார்

IMG 20211128 WA0029

ஆறுமுக நாவலர் பெருமானின் 200வது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முக்கிய அம்சமாக 192 வது குருபூசை தினத்தை முன்னிட்டு  நாவலர்  பிறந்த மண்ணில் இன்றைய தினம் இலங்கை பிரதமரின்  அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுபூராகவும் அறநெறிப் பாடசாலை களில் 100 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு  நூலகம் அமைக்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது 

IMG 20211128 WA0028

இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதா நாத் காசிலிங்கம், நந்திக்கொடி அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் தனபாலா மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட இன்றைய நிகழ்வில் 
நாவலர் பெருமானின் அந்த புரட்சிகரமான சைவ சமயத்துக்கு அவர் ஆற்றிய நன்றி தெரிவிக்கும் முகமாக இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன 

IMG 20211128 WA0025

இந்த வகையில் எமது பிரதமரின் அறிவித்தலின் மூலம் 200 ஆவது நூற்றாண்டு விழாவுக்கு ஒரு அவர் ஞாபகார்த்தமாக முத்திரை வெளியீடு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இந்த வகையில் இலங்கை பூராகவும் நாவலரின் 200 ஆவது நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்காக சகல ஏற்பாடுகளையும் இந்து கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது நாவலர் பெருமானை போற்றுவோம் சைவத்தை காப்பாற்றுவோம்-