இரணைமடு நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறப்பு: தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

nnnnnnnnnnnnnnn 4
nnnnnnnnnnnnnnn 4

தொடரும் அதிக மழையுடனான வானிலை காரணமாக கிளிநொச்சி – இரணைமடு நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

இன்று(28) காலை முதல் குறித்த வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், அந்த நீர்த்தேகத்தின் தாழ்நிலப்பகுதியில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக கிளிநொச்சி பொறியியலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இரணைமடு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் கிளிநொச்சி – பன்னன்கண்டி, கண்டாவளை மற்றும் முரசுமோட்டை உள்ளிட்ட பிரதேசங்கள் நீரில் மூழ்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக அம்மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.