ஜனாதிபதி கோட்டாபய சீனாவிற்கு விஜயம்

download 4 1
download 4 1

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 14ஆம் திகதி அவர் இவ்வாறு சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.

சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இவ்வாறு விஜயம் செய்யவுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு அங்கு தங்கியிருக்கவுள்ள அவர், முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஜனாதியாக பதவியேற்றவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

இந்தநிலையில் அவரின் சீனாவிற்கான விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.