புதிய கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் விக்னேஸ்வரன் !

vikki
vikki

அரசியல் கட்சிகளின் குழுக்களுடன் இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கையெழுத்திடவுள்ளார்.

விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி , சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் என். ஸ்ரீகாந்தாவினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது .

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும் புதிய கூட்டணி தேசிய தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட உள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது .

வரவிருக்கும் தைபொங்கலிற்கு முன்னர் விக்னேஸ்வரன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.