வலிகாமம் வடக்கு ‘பட்ஜட்’ ஏகமனதாக நிறைவேற்றம்!

IMG 20a9a848186d34bf3570c9643d770839 V 730x438 1
IMG 20a9a848186d34bf3570c9643d770839 V 730x438 1

யாழ்., வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தவிசாளார் சோ.சுகிர்தனால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது.

39 உறுப்பினர்களைக் கொண்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் இன்று கலந்துகொண்ட 29 உறுப்பினர்களும் வரவு – செலவு திட்டத்துக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

இன்றைய சபை அமர்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் 7 உறுப்பினர்களும், தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலா 1 உறுப்பினரும் கலந்துகொள்ளாத அதேவேளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் புதிய உறுப்பினர் ஒருவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 17 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் 8 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 6  உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா 2 உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.