தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை உருவாக்க தீர்மானம்!

202011061714471213 Local elections in Kerala will be held in 3 phases Kerala SECVPF
202011061714471213 Local elections in Kerala will be held in 3 phases Kerala SECVPF

இலங்கை பிரஜைகளிடமுள்ள இறைமையின் அடிப்படைக் கூறாக அமைவது சர்வசன வாக்குரிமையாகும்.

 அது தேர்தலின் போது மக்கள் விருப்பாக சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 

தேர்தலின் போது ஏதேனுமொரு வேட்பாளர், கட்சி அல்லது குழுவொன்று மக்களுடைய வாக்குகளுக்காக எந்தவொரு கட்டுப்பாடுகளின்றி அதிகளவில் பணம் செலவிடுவதன் மூலம் பொதுமக்களின் விருப்பு தொடர்பாக குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இல்லாவிடின், கட்சியால் மேற்கொள்ளப்படும் செலவுகளைக் கட்டுப்படுத்தும் தேவைகள் தொடர்பாக இலங்கையில் கலந்துரையாடப்பட்டு வருவதுடன், இந்தியா உள்ளிட்ட அதிகமான நாடுகள் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்ட ஒழுங்குகளை விதித்துள்ளன.

தேர்தலின் போது இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைக் குறைப்பதற்காகவும், ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்காகவும் தற்போதுள்ள கட்டளைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கு, 2017 ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கட்டமைப்பு மற்றும் சட்ட ஒழுங்குகளுக்கமைய மறுசீரமைப்புக்களை அடையாளங் கண்டு, திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட செயற்குழுவால் குறித்த தரப்பினர்களுடன் கலந்துரையாடி, உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.