சமையல் எரிவாயு குறித்து முறைப்பாடளிக்க இரு விசேட இலக்கங்கள்!

b7bab515 gas cylinder 3 850x460 acf cropped
b7bab515 gas cylinder 3 850x460 acf cropped

எரிவாயு பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, தீர்வுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 8 பேரடங்கிய குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பெலகே இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 011 58 11 927 அல்லது 011 58 11 929 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.