பூவரசங்குளம் பகுதியில் 50 மில்லியன் செலவில் ஏற்று நீர்பாசன திட்டம்

received 647019739647011
received 647019739647011

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்  உலக வங்கியின் 50 மில்லியன் ரூபா நிதி உதவியில் அமைக்கப்பட்ட  பூவசரங்குளம் ஏற்று நீர்பாசன திட்டத்தினை வடமாகாணஆளுனர் ஜீவன் தியாகராஜா  அவர்கள் நேற்று (03)  திறந்து வைத்துள்ளார்.

received 447435320099170

145 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 145 ஏக்கர் விவசாய நடவடிக்கைக்காக 50 மில்லியன் ரூபா செலவில் பூவரசங்குளத்தில் இருக்கும் நீரை மேட்டுநிலத்திற்கு ஏற்றி அதனூடாக பயிர்ச் செய்கைகளை நவீன தொழிநுட்பத்தினூடாக முன்னெடுக்கும்  செயற்திட்டமாக இது அமைந்துள்ளது.

வவுனிக்குளத்தின் ஒரு வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் 14 கீலோமீற்றர் தூரம் வந்து பூவசரங்குளத்தினை அடைகின்றது இந்த நீரின் மூலம் இந்த பகுதி விவசாயிகளின் நன்மை கருதி விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் இந்த ஏற்று நீர்ப்பாசன திட்டம்  அமைக்கப்பட்டுள்ளது

received 735956637362250

குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர்ப்பம்பிகள் ஊடாக நீர் வழங்கப்பட்டு தூவல் நீர்ப்பாசனங்களை பயன்படுத்தி பயிர்ச் செய்கை விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகள் ஊக்குவிக்கப்படவுள்ளனர்  

தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும்  உற்பத்தி செலவு அதிகரிப்பு.சந்தைப்படுத்தல் பிரச்சினையினை எதிர்கொண்டுவரும் விவசாயிகளின் குறித்த இரண்டு முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

received 619513492615896

இதனூடாக இந்த விவசாயிகள்  தை மாதம் தொடக்கம் புரட்டாதி மாதம் வரை மிளகாய் செய்கையும் ஜப்பசி தொடக்கம் தை வரையும் நிலக்கடலை செய்கையினையும் மேற்கொள்வார்கள்

இவ்வாறாக அமைக்கப்பட்ட இந்த பூவரசங்குளம் ஏற்று நீர்பாசன திட்டத்தினை ஆளுனர் ஊடாக பிரதேசத்தின் விவசாய சம்மேளத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது

received 295512325795234

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஆளுனரின் பிரதம செயலாளர் சமன் பந்துல சேன ,நவீனமயமாக்கல் செயத்திட்டதிட்ட பிரதி திட்ட பணிப்பாளர் கே.பத்மநாதன், வடமாகாண நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் வீ.பிறேம்குமார் மாகாண பிரதி பிரதமசெயலாளர், நீர்பாசன திணைக்கள பொறியியலாளர்கள்,அதிகாரிகள் மற்றும் மாந்தைகிழக்கு,துணுக்காய் பிரதேச செயலாளர்கள்,மாந்தைகிழக்கு,துணுக்காய் தவிசாளர்கள் உள்ளிட்டவர்கள் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.