தெஹிவளை விலங்கியல் பூங்காவில் முதல் தடவையாக 5 கறுப்பு அன்னங்கள்!

கறுப்பு அன்னம் 02 edited 640x480 1
கறுப்பு அன்னம் 02 edited 640x480 1

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 86 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள், தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 22 ஆம் திகதி பிறந்த இந்த அன்னப் பறவைகள், கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை.

அவுஸ்திரேலியாவுக்கு உரித்தான இந்த ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள் தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வசித்து வருகின்றன.

புதிதாகப் பிறந்த அன்னப்பறவைகளில் மூன்று ஆண் பறவைகளும், இரண்டு பெண் பறவைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.