கொழும்பிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் மூன்றாம் கொவிட் தடுப்பூசி!

Pfizer Vaccine 700x375 1
Pfizer Vaccine 700x375 1

கொவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை  மூன்றாவது தடுப்பூசியாக (பூஸ்டர் டோஸாக) வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை (10) முதல்  பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

முன்னதாக இரண்டு கொவிட் தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு இவ்வாறு மூன்றாவதாக பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.