அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Amir 2
Amir 2

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர், மன்றாசி நகர் பகுதியில் பேருந்து தரிப்பிடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வர்த்தக நிலையங்களை அமைப்பதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்கரபத்தனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற வேளையில், லிந்துலை நாகசேனையில் உள்ள சபைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தவிடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் கதிர்ச்செல்வன் பேருந்து தரிப்பிடமே உரிய அனுமதியுடன் அமைக்கப்பட்டு வருவதாகவும் எஞ்சிய இடத்தில் பிரதேச சபைக்கான வருவாயை அதிகரிப்பதற்காக வர்த்தக நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.