கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோய்த் தாக்கம் – 9 பேர் பலி

dengue
dengue

கிழக்கு மாகாணத்தில் 5914 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 09 மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் ஏ. எல். அலாவுதீன் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை திருகோணமலை மாவட்டத்தில் 2,276 டெங்கு நோயாளர்களும், கல்முனை பிராந்திய சுகாதார திணைக்களத்திற்குற்பட்ட பகுதியில் 1132 டெங்கு நோயாளர்களும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் 2218 டெங்கு நோயாளர்களும் மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 5914 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் ஆறு பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு இடங்களில் சிரமதானப் பணிகளையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் மாகாண பணிப்பாளர் தெரிவித்தார்.