ஒருவர் ஒரே தடவையில் 10 கிலோ கிராம் அரிசியை கொள்வனவு செய்யலாம் – பந்துல

Bandula Gunawardena
Bandula Gunawardena

சதொச விற்பனையகங்களில் நபர் ஒருவர் ஒரே தடவையில் 10 கிலோ கிராம் அரிசியை நாளை முதல் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் நபரொருவர் 10 கிலோ கிராம் அரிசியினை ஒரு தடவையில் கொள்வனவு செய்ய முடியும்.

இதற்கு முன்னதாக நுகர்வோருக்கு ஒரே தடவையில் 5 கிலோ கிராம் அரிசியினை கொள்வனவு செய்ய கூடியதாக இருந்தது.

தற்போது, அதனை 10 கிலோ கிராம் வரையில் அதிகரித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்தே காணப்படுகிறது.

பண்டாரவளை, பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் இன்மையினால் வர்த்தகர்களும், நுகர்வோரும் பாரிய அசௌகரியத்தினை எதிர்நோக்கியிருந்தனர்.