யுவதியொருவர் செலுத்திய உந்துருளி வீதியோரம் தரித்திருந்த முச்சக்கரவண்டியில் மோதி விபத்து!

Bike
Bike

யுவதியொருவர் செலுத்திய உந்துருளியொன்று வீதியின் ஓரத்தில் தரிக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடாகம பகுதியில் நேற்று (28) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில், உந்துருளியில் பயணித்த யுவதி காயமடைந்துள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எதிர்திசையில் வந்த டிப்பரைக் கண்டு குறித்த பெண் அச்சமடைந்ததால் அவர் பயணித்த உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியை மோதியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தினால் குறித்த உந்துருளியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.