பல்கலை. மாணவியின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட விதம்!

21 60de79d26adc1 3
21 60de79d26adc1 3

நுகேகொட, விஜேராம சந்தியில் உள்ள சிசிடிவி கமெராவில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட விதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாவியுடன் மோட்டார் சைக்கிள் கடையின் முன் நிறுத்தப்படடிருந்தமையே குறித்த திருட்டுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை இயக்கி சிறிது தூரம் சென்று, மற்றொருவரை ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளமை சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.