இலங்கைக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா வழங்கியிருக்க வேண்டும்!

subramanian swamy
subramanian swamy

இலங்கை மற்றும் இந்தியாவின் நீண்ட நாள் உறவை மேலும் தொடர வேண்டுமாயின் தற்போதைய அரசாங்கத்திற்கு 10 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியிருக்க வேண்டும் என இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரான கலாநிதி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

அவர் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறில்லை எனின், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்தும் அதிகரிக்ககூடும்.

நரேந்திர மோடி அரசாங்கம் வெளிநாட்டு கொள்கையில் அசமந்த போக்கைக் கடைப்பிடித்துள்ள நிலையில், அதற்கு இலங்கையும் மற்றுமொரு உதாரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரேஷ்ட அரசியல்வாதியான சுப்ரமணியன் சுவாமி, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான வலுவான உறவினை முன்னெடுத்து செல்ல செயற்பட்ட தலைவர்களில் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது.