புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்!

1640943918 CCTV 2 3
1640943918 CCTV 2 3

2022 புத்தாண்டின் விடியலை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நிஹால் தல்துவா தெரிவித்தார்.

அதன்படி இன்றும் நாளை இரவும் சீருடை அணிந்த காவல்துறை உத்தியோகத்தர்கள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளினால் இந்த விசேட நடவடிக்‍கை முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள், அதிவேகமாக வாகனம் செலுத்துபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கைது செய்தனர், திருட்டு சம்பவங்களை முறியடித்தல்,‍ போக்குவரத்து நெரிசாலை குறைத்தல் மற்றும் சுகாதார சுகாதார வழிகாட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ‍எடுக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை பொது மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் காலி முகத்திடல் மைதானத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், பொது மக்களின் நலனுக்காக விசேட வாகன தரிப்பிட வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.