இன்று முதல் பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு

school van
school van

பாடசாலை போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை 20 சதவீதத்தால் இன்று(03) முதல் உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தமக்கான எந்தவித நிவாரணங்களையும் அரசாங்கம் இதுவரை வழங்கவில்லையென அந்த சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில், போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதால் பாரிய நட்டத்தினை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில், அரசாங்கத்திற்கு முன்னதாகவே தெளிவுபடுத்தியிருந்தபோதிலும், அதுகுறித்து எந்த தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை.

மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடுவோர் 15 சதவீதத்தினாலும், மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடுவோர் 20 சதவீதத்தினாலும் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.