வலய ரீதியாக மின் துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பமானது – மின்சக்தி அமைச்சு

pawer cut
pawer cut

நேற்று முதல் வலய ரீதியாக மின் துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில், சுமார் ஒரு மணிநேரத்திற்கு மின் துண்டிப்பு இடம்பெறுவதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சில பாகங்களில் மின்துண்டிப்பு ஏற்பட்டிருந்தது.

நேற்றிரவு சில பாகங்களில், சில மணித்தியாலங்களுக்கு மின்துண்டிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, வத்தளை, கல்கிஸை, இரத்மலானை, மஹரகம, பொரலஸ்கமுவ, நுகேகொடை, அக்குரஸ்ஸ, பிபில, கெக்கிராவ, மாலபே முதலான பகுதிகளில் இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக தாங்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக குறித்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.