இயற்கை வனப்பரப்பை அதிகரிக்க விசேட திட்டம்

vikatan 2020 01 e7106424 3ae6 4b97 968e b786caaabd33 landscape 4692446 960 720
vikatan 2020 01 e7106424 3ae6 4b97 968e b786caaabd33 landscape 4692446 960 720

நாட்டில் இயற்கை வனப்பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள இயற்கை வனப் பரப்பை 29.2% இல் இருந்து 30% ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவ்வமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக மேலும் 65,000 ஹெக்டேயர் நிலத்தில் மர நடுகை செய்யப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இயற்கை காடுகளில் இறப்பர் பயிர்ச்செய்கையையும் சேர்க்க சுற்றாடல் அமைச்சு தீர்மானிள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபா செலவில் 500 ஹெக்டேயர் பரப்பளவில் இந்த வருடம் இறப்பர் செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டில் தற்போது 136,000 ஹெக்டேயர் பரப்பளவில் இறப்பர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.