எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டார் சஜித் பிரேமதாச !!

download 1 5
download 1 5

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச எதிர்கட்சித் தலைவராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (3) இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்பமானது.

ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய, அதி விசேட வர்த்தமானி மூலம் கடந்த மாதம் (2) ஆம் நாள் நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் இன்று (3) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி, 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.